காதலியின் முகம் சிதைந்ததால் குடும்பத்துடன் தப்பி ஓடிய காதலன்... வைரலாகும் பரிதாப புகைப்படம்

தமிழகத்தில் விபத்தின் போது காதலியின் முகம் சிதைந்ததால், காதலன் அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றி குடும்பத்துடன் ஓட்டம் பிடித்த நிலையில், இளம் பெண் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்துவின் மகள் அர்ச்சனா மற்றும் அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் காதலர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிர்பாரதவிதமாக சாலை விபத்தில் அர்ச்சனாவின் முகம் கோரமாக மாறியுள்ளது.



விபத்தில் முகம் சிதைந்து போனதால், கோவிந்தராஜ் திருமணம் செய்ய மறுப்பதாக கூறி,வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் காதலன் சிரஞ்சிவி தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Previous Post Next Post