இறந்த காதலன் அருகே மயங்கி கிடந்த காதலி: சிக்கிய கடிதம்!

ஆந்திர மாநிலத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கைலாசகிரி பகுதியில் உள்ள பூங்காவில் இளம் காதல் ஜோடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சி.ஏ. சத்யநாராயண மற்றும் ஆர் கமலா என்கிற காதல் ஜோடி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதில் சத்யநாராணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கமலா கவலைக்கிடமானா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சோதனையின் போது கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதனை வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும், இரு வீட்டாரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தாலே தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post