முதலாளி திட்டியதால் வீட்டைவிட்டு வெளியேறிய பூனை... என்ன கொண்டு வந்துச்சு தெரியுமா?

இந்தோனேஷியாவை சேர்ந்த ஹர்யந்தோ பேர்விர்ரா ரமாதானி என்பவர் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பதிவை 6,600 க்கும் மேலான எண்ணிக்கையிலான பயனர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். வைரலான அந்தப் பதிவில் அவர் எப்படி எழுதியிருந்தார் தெரியுமா?



அந்த வீடியோ பதிவுகளும் புகைப்படங்களும் பயங்கர வைரலாகிவிட்டது. அதைப் பார்ப்பவர்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்டு அதை தங்களுடைய பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஓனரின் பகிர்வு
அவரது வீட்டில் வளர்க்கும் செல்ல பூனை ஒன்றின் குறும்புத்தனத்தை பற்றி ஹர்யந்தோ தமது Kami Pecinta Kucing என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

நடந்தது என்ன?
இன்று காலை, எனது படுக்கையில் பூனை என் இயர்போன்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. கடித்து விளையாடியபோது, ஏதேச்சையாக இயர்போன் துண்டிக்கப்பட்டு இரு துண்டுகளாகி விட்டது. நான் அதைப் பார்த்ததும், பூனையை திட்டினேன்.

நான் திட்டியதும் பூனை வீட்டை விட்டு வெளியே சென்று விட்டது. ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்த அது, எனக்கு ஒரு வெகுமதியை கொண்டு வந்தது.



வச்சுக்கோ... மன்னிச்சுக்கோ
இயர்போனை கடித்ததற்காக வருத்தம் தெரிவிக்கும் பாவனையோடு இருந்த அந்தக் குட்டிப்பூனை சிறிய பாம்பு ஒன்றைக் கொண்டு வந்து ஹர்யந்தோவின் முன்பு போட்டுள்ள விவரத்தை பதிவில் படித்த நெட்டிசன்கள், மன்னிப்பு கேட்டு வெகுமதியை பூனை கொண்டு வந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்லப்பிராணிகள்
செல்லப் பிராணிகளை வளர்ப்பது மிகப்பெரிய பொறுப்புதான். அவற்றின் சேட்டைகள் பல நேரங்களில் நம்மை சிரிப்பில் ஆழ்த்திவிடும். உண்மையிலேயே வீட்டி்ல வளர்க்கும் செல்லப் பிராணிகள் மனிதர்களை விடவும் அதிகமாக உணர்வுப்பூர்வமாக நம்முடன் வாழ்கிறார்கள்.
Previous Post Next Post