யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியால் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடர்! (படங்கள்)

யுத்தம் நிறைவு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ளது.

அதனை நினைவுக்கூறும் வரையில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



முல்லைத்தீவில் இறுதியுத்தம் இடம்பெற்ற இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுடரேற்றும் தளத்தில் கூடிய மக்கள் இன்று தங்களது உறவுகளுக்கான உணர்வு பூர்மாக அஞ்சலியையும் மரியாதையும் செலுத்தினார்கள்.

இந்த முறை தனியொருவர் எவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படாது அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அஞ்சலி சுடரை ஏற்றிவைத்தார்.

முள்ளிவாய்க்கால் பிரகடனத்தை தமிழ் மொழியில் தென்கயிலை ஆதினம் திருகோணமலை அகத்தியர் அடிகலாரும், ஆங்கிலத்தில் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங்கும் வாசித்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சமூக இயக்கமாக மாற்றுவதாகவும், இதுநாள் வரையில் தாமதிக்கப்பட்டுள்ள நீதியைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த இயக்கத்தின் ஊடாக இணைந்து பயணிப்பதாகவும் பிரகடனம் செய்யப்பட்டது.

இன்றைய அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுன்ற உறுப்பினர் செல்வம் அடக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமசந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அதேநேரம், மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சல் நிகழ்வு நடைபெற்றிருந்தது.





       






           

































Previous Post Next Post