உங்க பெயரில் இந்த எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் வருதா? அப்போ நீங்க இப்படிபட்டவர் தானாம்!

உங்கள் பெயரில் சில எழுத்துக்கள் மீண்டும், மீண்டும் வரும்படி இருக்கும், சிலரது பெயரில் "A", "E","I", "O" போன்ற எழுத்துக்கள் மீண்டும், மீண்டும் வருவது போன்று இருக்கும்.



இதை வைத்து ஒருவரின் நேர்மறை, எதிர்மறை குணாதிசயங்கள் பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.

அந்தவகையில் உங்கள் பெயரில் மீண்டும் மீண்டும் வர கூடிய எழுத்துக்களை வைத்து உங்களது நேர்மறை, எதிர்மறை குணாதிசயங்கள் என்ன என்று பார்ப்போம்.

A, I, J, Q, Y
இந்த எழுத்துக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட முறை இடம் பெற்றிருந்தால், அந்த நபர் தைரியமானவராகவும், உண்மையை விரும்பும் நபராகவும், ஆதிக்கம் செலுத்தக் கூடியவராகவும் இருப்பார் என கூறப்படுகிறது.

சுதந்திரமாக செயல்பட, தன்னிலையை உயர்த்திக் கொள்ள போராடுவார்கள், ஒத்துழைத்து வேலை செய்வார்கள், பணம், மற்றும் சக்திக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

B, K, R
ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முறை வந்திருந்தால், அவர் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடிய நபராகவும், இசை மற்றும் கலையில் நாட்டம் முடையவராகவும், பொதுவாக அனைவருக்கும் உதவும் நபராக இருப்பார் என கூறப்படுகிறது.

C, G, L, S
ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முறை வந்திருந்தால், அவர்களிடம் கற்பனை திறன் மிகுதியாக இருக்கும். எழுத்து, கலை, தொழில் புரிதல் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.



C, G, L, S
கொஞ்சம் சுயநலமாகவும் நடந்துக் கொள்வார்கள். கவனம் சிதறுதல், சக்தியை வீணாக்குவது போன்றவற்றில் இவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

U, V, W
இவர்களிடம் கலை சார்ந்த திறமை மிகுதியாக இருக்கும். மனித நேயம் மிக்கவர்களாக இருப்பார்கள்.மற்றவர்களுக்கு உதவும் குணம் இயற்கையாகவே இவர்களிடம் அதிகம் காணப்படும்.

உள்ளூர் வாழ்க்கையை தான் விரும்புவார்கள். புகழ் மற்றும் சமூக பெயர் மிக்கவர்களாக இருப்பார்கள். சமூக சேவை மற்றும் வெளியிடங்களுக்கு சென்று உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.

D, M, T
கடினமாக உழைக்கும் குணம், தொழிலை விரிவாக்கம் செய்ய முயற்சி, பணத்தை சரியாக பயன்படுத்துவது, மேலாண்மையில் சிறந்து விளங்குதல் போன்றவற்றில் இவர்கள் சிறந்து காணப்படுவார்கள். உறவினருக்கு உதவ முற்படுவார்கள். இது உங்கள் செயல்திறனை குறைக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.



O,Z
ஆழ்ந்த சிந்தனை, ஆராய்ச்சி, கற்றல், தவம், உண்மையை தேடுதல் போன்றவற்றில் நிறைய ஈடுபடுவர்கள். கூட்டத்தில் ஒருவனாக நிற்காமல், தனித்து நிற்க முயற்சிப்பார்கள்.

P, F
தொழில் புரிதலில் புத்திசாலியாக திகழ்வார்கள். தொழில், பயணம், மகிழ்ச்சி நிறைய செலவு செய்தல், இடங்கள் வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.

E, H, N, X
பொது பணிகளில் சிறந்து விளங்குவார்கள். ஆறேழு முறை இந்த எழுத்து ஒருவரது பெயரில் இடம் பெறுகிறது எனில், அவர் உணவு, குடி மற்றும் உடலுறவில் நாட்டம் அதிகமாக கொண்டிருப்பார் என கூறப்படுகிறது.
Previous Post Next Post