இந்த ஆறு ராசிக்கார பெண்களும் அதிக பொறாமை குணம் கொண்டவர்களாம்! இதில் உங்க ராசி இருக்கா?


ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்கள்.

அந்தவகையில் சிலர் தனக்குள்ளே பொறாமை பட்டுக்கொள்வார்கள், சிலரோ பொறாமையால் மற்றவர்களின் நிம்மதியையும் கெடுக்க நினைப்பார்கள்.

தற்போது அதிக பொறாமை குணம் கொண்ட பெண்களின் ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

விருச்சிகம்இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் உணர்ச்சிகளுக்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் போராடுவார்கள். இவர்களின் சுயநலமும், தற்பெருமையும் மற்றவர்களின் வெற்றியை சகித்து கொள்ள அனுமதிக்காது.

குறிப்பாக மற்றவர்களின் அழகு மீது இவர்களுக்கு எப்போதும் பொறாமை இருக்கும். அதிக கோபப்படும் இவர்கள் மற்றவர்களின் பொறுமையை அதிகம் சோதித்து அதனை இழக்க வைப்பார்கள்.

இதற்குத்தான் பொறாமைப்பட வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் இவர்களுக்கு இல்லை. எப்போதும் அதற்கு ஒரு காரணத்தையும் தயாராக வைத்திருப்பார்கள்.

சிம்மம்ஆண்களின் மனதை ஆளத்தெரிந்தவர்கள் சிம்ம ராசி பெண்கள். அழகு மட்டுமல்ல இவர்களின் திறமை, ஆற்றல், புத்திசாலித்தனம் என அனைத்துமே மற்றவர்களை கவர்வதாக இருக்கும்.

ஆடம்பரமான பரிசுகளை இவர்கள் அதிகம் விரும்புவார்கள் ஆனால் அதற்கு பதிலாக இவர்கள் தருவது இவர்களின் இருப்பை மட்டுமே.

இவர்கள் மறைமுகமாக பொறாமை படமாட்டார்கள், நேரடியாகவே தங்கள் மனதில் இருப்பதை கூறிவிடுவார்கள்.

இவர்களின் பொறாமையை இவர்கள் வெளிப்படுத்தும் விதம் இவர்களின் கோபம் ஆகும். மற்றவர்களை விட இவர்களிடம் பழிவாங்கும் குணம் அதிகமாகவே இருக்கும்.

மேஷம்மேஷ ராசி பெண்கள் தங்கள் மனது என்ன சொல்கிறதோ அதனை பின்பற்றி நடப்பவர்கள். இவர்களை பொறுத்தவரை அன்பு அவசியமான ஒன்றாகும் ஆனால் பொறாமை குணம் இவர்களின் உணர்ச்சிகளை தடுக்கிறது.

இவர்களின் நடத்தை ஒரு சர்வாதிகாரியை போல இருக்கும் உலகம் முழுவதும் தன் முன் மண்டியிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள்.

அவர்கள் விரும்புபவர்களுக்கும் இதே நிலைதான். மற்றவர்களின் அழகு, குணம் என அனைத்தின் மீதும் இவர்களுக்கு பொறாமை இருக்கும். நிரூபிக்க முடியவில்லை என்றாலும் இவர்களுக்கு இவர்கள் செய்வது எப்பொழுதுமே சரிதான்.

மிதுனம்மிதுன ராசி பெண்களின் மனநிலை வானிலை போல மாறிக்கொண்டே இருக்கும். பல முகங்களுடன் வாழ்வது என்பது மிகவும் தனித்துவமான ஒரு குணமாகும், அது இவர்களுக்கு மிகவும் எளிதாகவே வரும்.

இவர்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஒரு உறவை இழக்கும் நிலை வரும்வரை அதன் முக்கியத்துவம் இவர்களுக்கு புரியாது.

இவர்களின் பொறாமை எப்பொழுதும் மற்றவர்களை காயப்படுத்துவதாகவே இருக்கும். இவர்கள் என்ன செய்வார்கள் என்ற பயம் எப்பொழுதும் அனைவருக்கும் இருக்கும்.

கடகம்முரண்பாடுகளின் மொத்த உருவம் கடக ராசி பெண்கள். இவர்களுக்குள் எப்பொழுதும் ஏகப்பட்ட ரகசியங்கள் நிறைந்திருக்கும்.

இவர்களுக்கு உறவுகள்தான் எல்லாமே, எனவே அவர்களின் கவனம் எப்பொழுதும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அது குறையும்பட்சத்தில் இவர்களுக்குள் பொறாமை அதிகரிக்கும். துரோகத்தையும், ஏமாற்றத்தையும் இவர்களால் தாங்கிக்கொள்ள இயலாது.

பொறாமையால் இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.

மகரம்மகர ராசி பெண்கள் புரியாத புதிராவார்கள். இவர்களின் சிறப்பே இவர்களிடம் நிறைந்திருக்கும் தன்னம்பிக்கைதான். இவர்கள் எப்பொழுதும் அமைதியாகவும், மற்றவர்களிடம் பழகாதவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் இவர்களுக்குள் பொறாமை தீ எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் அது அவர்களையே துன்புறுத்தும். இவர்களின் பொறாமையால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதை காட்டிலும் இவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

இவர்களின் தன்னம்பிக்கை அதிகம் இருந்தாலும் இவர்களின் பொறாமை அதை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும்.
Previous Post Next Post