திருமணத்தால் நடந்த விபரீத சம்பவம்..! மாமனாரை உயிருடன் கொளுத்திய மருமகள்..!

கணவனுக்கு 2வது திருமணம் செய்து வைத்த மாமனாரை மருமகள் தீவைத்து எரித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவரது மகன் பிரபாகரன்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் பிரபாகரனுக்கும் சென்னை மாதவரத்தை சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாகத் திருமணமான ஓராண்டுக்குள் பிரபாகரனும் காயத்ரியும் பிரிந்துள்ளனர். இதன் காரணமாக காயத்ரி தனது அம்மா கலைவாணி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மகன் பிரபாகரனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கச் சபாபதி திட்டமிட்டுள்ளார். அதன்படி சமீபத்தில் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார்.இதையறிந்த முதல் மனைவி காயத்திரி, கடந்த சில தினங்களுக்கு முன் மாமனாரிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் சபாபதி மகன் திருமணம் குறித்து காயத்ரியிடம் சரியாகப் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடங்காத காயத்ரி மறுநாள் தனது தாய் கலைவாணியுடன் சென்று, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சபாபதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி உள்ளார்.இதனால் வலி தாங்க முடியாமல் சபாபதி அலறச் சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர் சபாபதியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் சபாபதியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு காயத்ரி மற்றும் அவரது தாயாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மாமனாரை மருமகளே தீயிட்டுக் கொளுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post