இந்த அட்டைப் பெட்டிகளில் இருப்பது இராணுவ வீரர்களின் உடல்களா? வைரலாகும் புகைப்படம்

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் இறந்து போன இந்திய இராணுவ வீரர்களின் சடலங்கள் அட்டை பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், பொலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இறந்துபோன வீரர்களின் புகைப்படம் அட்டை பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.
நாட்டுக்காக போராடிய வீரர்களுக்கு மரியாதை இல்லை, அவர்களை இப்படி அட்டை பெட்டியில் வைத்து அவமானப்படுத்தும் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சித்து கண்டனங்கள் எழுந்தன. ஆனால், இது போலியான புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்த மகாராஷ்டிர காவல்துறையின் சி60 கமாண்டோ படையை சேர்ந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படும் நிகழ்வு அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
இந்நிலையில், சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வந்த புகைப்படம் 2017 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் என்னும் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளனாதில், அதில் பயணித்த 7 வீரர்களும் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்கள் அட்டை பெட்டியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் என தெரியவந்துள்ளது. ஆனால், வீரர்களின் புகைப்படங்களை அட்டை பெட்டியில் அடைக்கப்பட்டிருந்ததற்கு 2017 ஆம் ஆண்டே கண்டனங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post