அட்சய திருதியையாகிய இன்றைய நாளில் யாழ்ப்பாணத்தில் மக்கள் தங்கம், வெள்ளி நகைகளை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதி அக்சய திருதியையாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அட்சய திருதியை செல்வச் செழிப்பை பெருக வைக்கும் நாளாக நம்பப்படுகிறது.
இந்த நாளில் தங்கம் வாங்கினால்,குடும்பத்தில் செல்வம் அதிகரிக்கும் என்பது நீண்டகால நம்பிக்கை.
இதனால், இந்நாளில் தங்கம், வெள்ளி நகைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் காலை எட்டு மணி முதலே பல கடைகள் இயங்கத் தொடங்கிவிட்ட நிலையிலும், இன்று நகைக் கடைகள் வழக்கத்தை விட அதிக நேரம் கடைகள் திறந்திருக்கும் என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.