சிகிச்சைக்கு வந்த நபரின் காதை சோதித்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... வைரலாகும் வீடியோ

மனிதனின் காதில் சிலந்தி ஒன்று வலை கட்டி வரும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சீன நாட்டை சேர்ந்தவர் லீ. அவருக்கு வலது காதில் ஏதோ ஊர்வது போன்றும் அரிப்பது போன்றும் இருந்துள்ளது. இதையடுத்து அவர் யாங்ஷோவில் உள்ள மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணரை சந்தித்தார்.

அப்போது காதை சோதனை செய்தனர். ஆனால் மருத்துவர்களால் ஒன்றும் கண்டறிய முடியவில்லை. இதனால் கருவி மூலம் மருத்துவர்கள் சோதனை செய்த போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.



ஏனெனில் அவரது காதில் சாம்பல் நிற சிலந்தி ஒன்று உயிருடன் இருந்தது. அதுவும் வலை கட்டி வருவதைக் கண்டுள்ளனர்.

அதன் பின் கருவி மூலம் சிலந்தியை வெளியேற்றியுள்ளனர். இதனால் லீக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருவி மூலம் சிலந்தியை வெளியேற்றும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Previous Post Next Post