தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இரு தேர்தல்களிலுமே முன்னிலை பெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரம்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டும் முன்னிலையில் உள்ளது.
அங்கும் வாக்கு வித்தியாசம் பெரிதாக இல்லை என்பதால் ஒய்எஸ்ஆர் காங்கிரசுடன் கடுமையான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல் 175 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 146 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 27 சட்டப்பேரவை தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
பாஜக மற்றும் ஜன சேனா கட்சிகள் தலா ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. 147 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதால். அக்கட்சியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் பெரும் பின்னடைவை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.