உங்கள் வாழ்க்கையில் இந்த மிருகங்களை அடிக்கடி பார்க்கிறீங்களா? அப்போ நல்ல சகுனம் தானாம்!

சாஸ்திரப்படி சில மிருகங்களை அடிக்கடி பார்ப்பது அதிர்ஷ்டத்தை கொண்டுவரலாம், சில மிருகங்கள் ஆபத்தையும், துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரலாம் என சொல்லப்படுகின்றது.அந்தவகையில் நமது வாழ்வில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மிருங்களை பார்ப்பதனால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

பல்லி நீங்கள் வெளியே செல்லும்போது பல்லி உங்கள் பாதையில் வந்தால் நீங்கள் செல்லும் காரியம் வெற்றிகரமாக முடியும் என்று நம்பப்படுகிறது.

மேலும் நல்ல செய்திகள் உங்களை தேடி வருவதன் அடையாளமாகவும் பல்லி இருக்கும். பல்லி உங்கள் வழியில் வந்தால் உங்களுக்கு வெற்றிதான் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.

ஆந்தை

ஆந்தை உங்கள் பாதையில் வந்தாலோ அல்லது உங்கள் கண்களில் அடிக்கடி அது பட்டாலோ அது இயற்கை உங்களுக்கு கூறவரும் செய்தி என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஆந்தை உங்கள் வழியில் வருவது நீங்கள் சில குழப்பமான சூழ்நிலைகளில் விழப்போவதை குறிக்கும்அவ்வாறு குழப்பமான சூழ்நிலைகளில் நீங்கள் மற்றவர்களின் பேச்சை கேட்காமல் உங்களின் சொந்த அறிவை உபயோகப்படுத்தி முடிவெடுக்க வேண்டும்.

கிளிகிளி உங்கள் பார்வையிலோ அல்லது வழியிலோ வருவது என்பது நல்ல சகுனமாக கருதப்படுகிறது.

உங்கள் கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் உடனிருந்து காப்பாற்றுவார்கள் என்பதன் அறிகுறிதான் கிளி ஆகும்.

கழுகுகழுகு உங்கள் வழியிலோ அல்லது நெருக்கமாகவோ வந்தாலோ இயற்கை உங்களுக்கு உணர்த்த வருவது என்னவெனில் வரும் நாட்களில் நீங்கள் பல முக்கியமான பாடங்களை கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதாகும்.

பச்சோந்திநீங்கள் தோல்வியில் இருக்கும்போது உங்கள் வழியில் பச்சோந்தியை பார்த்தால் நீங்கள் உங்கள் இலக்கை மாற்றிக்கொள்ளாமல் அதிலேயே வேறு முயற்சிகளை செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

பாம்புபாம்பு இவை சக்தி மற்றும் ஞானத்தின் அடையாளமாக இருக்கிறது. இது நமக்குள் இருக்கும் ஆற்றலை உணர்த்துவதாக இருக்கிறது.

உங்கள் பாதையில் பாம்பு வந்தால் நீங்கள் வெற்றியை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சிலந்தி பூச்சி


சிலந்தி பூச்சி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது, இதன் வலை நாம் இயற்கையுடன் இணைந்திருப்பதை உணர்த்தும்.

பழங்காலத்தில் சிலந்தி நண்பர்கள் மற்றும் கடந்த காலத்தின் அடையாளமாக கருதப்பட்டது, இப்போதும் அதன் அர்த்தம் அதுதான். இது உங்களை நோக்கி உபயோகமான செய்திகள் வருவதை குறிக்கும்.

காகம்காகம் உங்கள் பாதையில் வருவது நீங்கள் இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்த முக்கியமான உண்மையை தெரிந்து கொள்ள போவதன் அர்த்தம் ஆகும்.

நீங்கள் உண்மையை தெரிந்து தயாராகி விட்டதன் அறிகுறிதான் காகம் உங்கள் வழியில் வருவது.
Previous Post Next Post