தொடரும் முன்னாள் போராளிகளின் மர்ம மரணம்! உயிரிழந்த மற்றுமொரு போராளி

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் இறந்து வருகின்றனர். போராளிகளின் மரணம் குறித்து விசஊசி தொடர்பான குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்துள்ள நிலையில் தற்பொழுது இன்னொரு மரணம் சம்பவித்துள்ளது.பூநகரி, நாலாங்கட்டைப் பகுதியில் வசித்துவந்த விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவில் இருந்து புனர்வாழ்வுபெற்ற குணசேகரம் வாகீசன் (31) என்ற முன்னாள் போராளி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில், கண்டறியப்படாத நோய்த்தாக்கத்தினால் இவர் இறந்துள்ளார்.Previous Post Next Post