அந்த புகைப்படங்களை அழித்துவிடு: வெளிநாட்டில் இருந்து வந்து காதலனை கடத்திய காதலி

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த கல்லூரி மாணவனை அவரது அமெரிக்க காதலி அடியாட்கள் மூலம் கடத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.

நவீத் அகமது என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் அமெரிக்காவில் வசித்து வந்து தொழிலதிபரின் மகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து வந்த காதலி, தனது காதலனுடன் திரையரங்கு மற்றும் பூங்காங்களுக்கு சென்றுள்ளார். அதன்போது இவர்கள் இருவரும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

நெருக்கமான புகைப்படத்தை அழிக்கும்படி காதலி கேட்டுக்கொண்டார். ஆனால் நவீத் அகமது மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காதலியை, நவீத் அகமது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.இதனால் கோபம் அடைந்த காதலி, தனது நண்பர்கள் பாஸ்கர் (26), சரவணன் (23), பாட்ஷா (22) ஆகியோரிடம், காதலன் நவீத்தை கடத்தி, அவரிடம் உள்ள புகைப்படங்களை அழித்துவிட்டு தாக்குதல் நடத்துமாறு கூறியுள்ளார்.

அதன்படி, கடந்த 9-ந் தேதி இரவு நவீத் அகமதுவை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர். ஜாபர்கான்பேட்டையில் உள்ள இருட்டு பகுதியில் நவீத் அகமதுவை இறக்கிவிட்டு அவரிடம் இருந்த பொருட்களை பறித்துவிட்டு அவரை அடித்து உதைத்துவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

file
இதில் மயங்கிய நவீத், சிறிது நேரம் கழித்து தானாக அங்கிருந்து வீட்டுக்கு சென்று தனது தந்தையின் உதவியுடன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில் , பாஸ்கர் மற்றும் சரவணனை கைது செய்தனர். பாட்ஷா தலைமறைவாகி விட்டார். அவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

நெருக்கமான புகைப்படத்தை வைத்து காதலன் மிரட்டியதாகவும், அதனால் ஆள் வைத்து கடத்தியதாகவும் அமெரிக்க காதலி பொலிசில் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post