முன்னிலை வகித்த பா.ஜ.க! அதிர்ச்சியில் வாக்குச்சாவடியிலேயே உயிரிழந்த காங்கிரஸ் தலைவர்

மத்தியபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திலேயே காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.இந்நிலையில் இன்று காலை மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் சீஹோர் மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவர் ரத்தன் சிங் வாக்கு எண்ணும் மையத்தில் முடிவுகளைத் தெரிந்துகொள்ள காத்துக்கொண்டிருந்தார். பா.ஜ.க தொடர்ந்து முன்னிலை வகிப்பதை அறிந்த ரத்தன் சிங் அதிர்ச்சியடைந்த நிலையில் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி விழுந்தார்.

ரத்தனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

ரத்தனின் மறைவு காங்கிரஸ் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Previous Post Next Post