நீர்கொழும்பில் கடந்த ஞாயிறு அன்று இரு தரப்பினருக்கு இடையில் மோதல் நடந்த நிலையில் அதில் சிக்கிய ஒரு பெண் துபாயில் உள்ள தனது கணவரிடம் வீடியோ அழைப்பில் பீதியுடன் பேசியுள்ளார்.
இலங்கையின் நீர்கொழும்பில் கடந்த ஞாயிறு அன்று இருதரப்பினருக்கு இடையில் நடந்த சண்டையில் வீடுகள் மற்றும் உடமைகள் சூறையாடப்பட்டது.

இந்த சமயத்தில் நீர்கொழும்பில் வசிக்கும் இளம் பெண் மிகவும் பாதிப்படைந்தார்.
இதையடுத்து துபாயில் சூப்பர்வைசராக பணியும் அவரின் கணவர் முகமதுக்கு வீடியோ அழைப்பில் பேசினார்.
அவர் கூறுகையில், ஞாயிறு இரவு நான் என் வீட்டில் இருந்தேன், அப்போது நீர்க்கொழும்பில் வசிக்கும் என் மனைவி எனக்கு வீடியோ அழைப்பில் போன் செய்தார்.
அழுது கொண்டே பேசிய அவர், நாங்கள் தாக்கப்படலாம், நான் மீண்டும் உங்களுக்கு போன் செய்கிறேன், நீங்கள் எனக்கு போன் செய்ய வேண்டாம்.

ஏனெனில் போன் வெளிச்சத்தை பார்த்தால் நாங்கள் வீட்டின் உள்ளே இருப்போம் என்பதை அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என கூறி போனை கட் செய்துவிட்டார்.
இதன் பின்னர் என் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்களா என தெரியாமல் நான் தவித்தேன்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் எனக்கு வீடியோ அழைப்பு வந்தது, அதில் என் மனைவி மற்றும் இரு குழந்தைகள் கத்தியபடி இருந்தார்கள்.
அங்கு வந்து தங்களை காப்பாற்றுமாறு என்னிடம் கூறினார்கள், ஆனால் நான் கடல் கடந்து அவர்களை விட்டு தள்ளி இருந்தேன் என கூறினார்.
மேலும் தன் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து குடும்பத்தார் தன்னிடம் கூறினார்கள் என்றும் முகமது தெரிவித்தார்.

அதாவது ஒரு கும்பல் வாள் மற்றும் கற்களுடன் வந்து வீடுகளை தாக்கினார்கள். இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என தெரியவில்லை.
அவர்கள் முகத்தை துணியால் மூடியிருந்தனர். எங்கள் வீட்டுடன் சேர்ந்து என் மாமா வீடும் மிகவும் சேதமடைந்தது என மனைவி தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதனிடையில் இந்த மோதலில் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என இலங்கை பிரதமர் கூறியதாக AFP பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.