தங்கையை கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த முதல் மனைவி... அதன் பின் நடந்த விபரீதம்

தங்கையை இரண்டாம் திருமணம் செய்த கணவர், அவரிடம் அதிகம் பாசம் காட்டியதால், மிகுந்த வேதனையடைந்த அக்கா, தங்கை என்று கூட பாராமல் அவரை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர், அங்கிருக்கும் இறைச்சிக் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கும் வங்க தேசத்தைச் சேர்ந்த சுராகாத்தூண் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிகளுக்கு அழகான இரண்டு குழந்தைகள் உள்ளன. சுராகாத்தூணுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போவதால், குழந்தைகளையும் கணவரையும் அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை.

இதற்கிடையியில் சுராகாத்தூணின் உறவினர் தங்கை முறையான ஜெரினா பேகத்துக்கு உறவினர்கள் மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் நினைத்தது போன்று வங்கதேசத்தில் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்பதால், ஜெரினா பேகத்தை சுராகாத்தூண், தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.இங்கேயும் அவருக்கு வரன் அமையவில்லை. இதனால் ஜெரினா பேகத்தை முகமது ரஷீத்துக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று சுராகாத்தூண் விரும்பியுள்ளார்.

அதன் படி இருவரிடம் பேசி சம்மதம் பெற்று, இரண்டு பேருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜெரினாபேகம், 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.ஜெரினாபேகத்தை திருமணம் செய்த பிறகு முகமது ரஷீத், சுராகாத்தூண் மீது அன்பாக இருப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் மிகுந்த வேதனையடைந்த அவரால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுள்ளது. சம்பவ தினத்தன்று,

ஜெரினாபேகம் வீட்டில் இருந்தார்.

அப்போது சுராகாத்தூணுக்கும் ஜெரினாபேகத்துக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுராகாத்தூண், ஜெரினாபேகத்தை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அதன்பிறகு கர்ப்பிணியாக இருக்கிறார் என்றுகூட பார்க்காமல் அவரின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். ரத்தம் வெளியேறி அவர் உயிருக்குப் போராட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், சுராகாத்தூணும் முகமது ரஷீத்தும் சந்தோஷமாக குடும்பம் நடத்தியுள்ளனர். சுராகாத்தூணின் தங்கை ஜெரினாபேகத்துக்கும் முகமது ரஷீத்துக்கும் திருமணம் நடந்தபிறகு அந்தக் குடும்பத்தில் நிம்மதியில்லை.

ஜெரினா பேகத்துக்கு மாப்பிள்ளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நீ என் கணவரை திருமணம் செய்துகொள், நீயும் நானும் சந்தோஷமாக விட்டுக் கொடுத்து வாழலாம் என்று சுராகாத்தூண் கூறியுள்ளார்.அதன்பிறகு சுராகாத்தூணை விட ஜெரினாபேகத்தின் மீது அளவுகடந்த அன்பைக் காட்டியுள்ளார் முகமது ரஷீத். இதனால் மனவேதனையடைந்த சுராகாத்தூண், ஜெரினாபேகத்தை கொலை செய்ய முயன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
Previous Post Next Post