
நட்சத்திர ஹோட்டல் தற்கொலைதாரிகளில் ஒருவரான இன்சாப் இப்ராஹீம் தனது மனைவிக்கு “நான் இறைவனிடம் செல்கிறேன்” எனக் கூறி கடைசியாக குரல்பதிவுச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இன்சாப் இப்ராஹீம் இறுதியாக மனைவிக்கு அனுப்பிய குரல்பதிவுச் செய்தியை அமெரிக்க விசாரணையாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
அதில், பணம் தரவேண்டியவர்கள் பெயர்களை பட்டியலிட்டு அவர்களிடம் பணத்தை கேட்டு பெறுமாறு மனைவியை அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் வீட்டில் இருக்கும் இரண்டு கார்களில் ஒன்றை விற்றுவிடுமாறும் சொல்லியிருப்பதாக சில தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், எதற்கும் மனம் கலங்கக் கூடாதெனவும், நான் இறைவனிடம் செல்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

பிரபல தொழிலதிபரான யூசுப் மொஹமட் இப்ராஹிமின் புதல்வர்களான இன்ஷாப் இப்ராஹிம், அவரது சகோதரரான இல்ஹாம் இப்ராஹிம் ஆகியோரே நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதலை நடத்தியவர்களாவர்.
அத்துடன் 38 வயதான இன்ஷாப் இப்ராஹிம் தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் கொழும்பு நகரில் 1.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான வீட்டில் வசித்து வந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.