மூன்று மகள்களுக்கும் விஷம் வைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை!

இந்தியாவின் வாரணாசியை சேர்ந்த தந்தை ஒருவர் மூன்று மகள்களுக்கும் விஷம் வைத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வாரணாசியை சேர்ந்த தீபக் குமார் என்பவருக்கு நவ்யா (9), ஆதிதி (7), ரியா (5) என்கிற மூன்று மகள்கள் இருந்தனர்.

நேற்றைய தினம் இரவு வீடு திரும்பிய தீபக் குமார், பானத்தில் விஷம் கலந்து தன்னுடைய மூன்று மகள்களுக்கும் கொடுத்துவிட்டு, தானும் அதனை குடித்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் 4 பேரும் தரையில் சரிந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களுடைய பாட்டி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.அங்கு மூன்று பேருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் மூன்று பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நிதி நெருக்கடி காரணமாகவே தீபக் குமார் தற்கொலை செய்திருக்கலாம் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post