அம்மாடியோவ் ஐஸ்வர்யா ராய் மகளா இது?... காணொளியைப் பாருங்க ஷாக் ஆகிடுவீங்க!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயை போன்றே அவரின் மகள் ஆராத்யாவுக்கும் டான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் ஆராத்யா நடனப் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடியுள்ளார்.



ஜோயா அக்தரின் கல்லி பாய் படத்தில் வந்த மேரே கல்லி மேன் என்கிற பாடலுக்கு ஆராத்யா நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது தீயாய் பரவி வருகின்றது.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா, அம்மாவை போன்றே மகளும் அருமையாக டான்ஸ் ஆடுகிறார் என்கிறார்கள் ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள். ஆராத்யா டான்ஸ் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆராத்யா டான்ஸ் ஆடியதை பார்க்க ஐஸ்வர்யா, அபிஷேக்குடன் பாட்டி ஜெயா பச்சன், அத்தை ஸ்வேதா நந்தா ஆகியோரும் நடனப் பள்ளிக்கு வந்திருந்தனர். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி ஆகியோர் பாலிவுட்டில் இருப்பதால் ஆராத்யாவும் நடிகையாவாரா என்று தெரியவில்லை என்ற ஏக்கத்துடன் நெட்டிசன்கள் காணப்படுகின்றனர்.



Previous Post Next Post