கல் மனிதனாக மாறிய சிறுவன்: கண்ணீர் வடிக்கும் தாய்!

கல் மனித நோய்க்குறியால் பாதிக்கப்பட்டிருக்கும் தன்னுடைய மகனுக்கு உதவி கோரி அவருடைய தாய் கண்ணீருடன் நிதி திரட்டி வருகிறார்.



ரஷ்யாவை சேர்ந்தவர ஸ்வெட்லானா பவ்லெங்கோ (41) என்கிற தாய். இவருடைய மகன் Timofey, கல் மனிதன் என அறியப்படும் ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோயானது ஒவ்வொரு 2 மில்லியன் மக்களில் ஒருவரை பாதிக்கிறது. உலகெங்கிலும் இதுவரை ஆயிரத்தில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நோய்க்கு எந்தவிதமான சிகிச்சைகளும் இல்லை என்றாலும், உலகின் சிறந்த வல்லுநர்களை சந்திப்பதற்காக அவருடைய தாய் நிதி திரட்டி வருகிறார்.

இதுகுறித்து சிறுவனின் தாய் கூறுகையில், Timofey எங்கள் இளைய குழந்தை. நாங்கள் மிகவும் நேசித்த சிறுவன். அவன் ஆரோக்கியமாக தான் பிறந்தான்.



அவனுடைய சிறிய கால்விரல்கள் மட்டும் ஒரு பிட் வளைவாக இருந்தன. ஆனால் மருத்துவர்கள் இது ஒரு பிரச்சனையாக இல்லை என்று கூறினாலும் எங்களுக்கு சிறிய கவலை இருந்தது.

அந்த நேரத்தில், இது ஸ்டோன் மேன் நோய்க்குறியின் முதல் அறிகுறி என்று தெரியாது. இந்த மாதத்தில் அவனுடைய தலையில் ஒரு சிறிய கட்டி தோன்றியது.



அவன் வளர்ந்தபின், இந்த கட்டி அவனுடைய கழுத்து, தோள்கள் மற்றும் கைப்பகுதியை நோக்கி நகர்ந்து, உடல் இயக்கங்களை கட்டுப்படுத்தியது. அசைக்க முடியாத அளவிற்கு அவனுடைய உடல் உள்ளது. அவனால் பின் பக்கம் திரும்பவோ, கையை மடக்கவோ முடியாது.

நாங்கள் மாஸ்கோ செல்லும் வரை என்ன நடக்கிறது என்பது குறித்து மருத்துவர்களால் கூட விளக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post