
இன்று எந்த எந்த ராசிக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
மேஷம்

உங்களுடைய பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உண்டாகும். உங்களுடைய புதிய முயற்சிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வீண் அலைச்சல்கள் உண்டாகலாம்.
மந்தத் தன்மையான செயல்களால் நேரங்கள் வீணடிக்கப்படும். அடுத்தவர்களுடைய வேலையில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது.
மனதுக்குள் நீங்கள் நினைத்த எண்ணங்கள் யாவும் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
ரிஷபம்

வீட்டில் இருந்து வந்த சின்ன சின்ன பொருளாதாரத் தடைகளும் நீங்கும். புதிய நபர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
நண்பர்களின் மூலம் உங்களுக்கு நிறைய பணவரவுகள் வந்து சேரும். மனதுக்குள் நினைத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.
மிதுனம்

மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
தேவையில்லாத விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.
கடகம்

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் உங்களைத் தேடி வரும். ஆராய்ச்சி சம்பந்தமான எண்ணங்கள் மனதில் தோன்றும்.
உடல் ஆரோக்கியத்தில் சிறிது மேன்மை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சுய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் மேலோங்கி நிற்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கிறது.
சிம்மம்

வியாபாரம் சம்பந்தப்பட்ட கடனுதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.
கன்னி

மனக் கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயங்கள் உண்டாகும்.
பிறருக்கு உதவும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு உயர்கல்வியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.
துலாம்

தொழில் சம்பந்தமாக முக்கய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும் வாய்ப்புண்டு. உங்களுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி அதன் மூலம் பெண லாபம் பெறுவீர்கள்.
மன மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, மனம் மகிழ்ச்சி உண்டாகும்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம்அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.
விருச்சிகம்

வெளியிடங்களில் எதிர்பார்த்திருந்த கடனுதவிகள் கைக்கு வந்து சேரும். சொந்த ஊருக்கு பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
நினைத்த செயல்களை செய்து முடிப்பதில், கொஞ்சம் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.
தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
தனுசு

புதிதாக அறிமுகம் ஆகின்ற நபர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களுடைய முழு ஆதரவும் கிடைக்கும்.
மறுமணம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் இந்த சமயத்தில் வரன் தேடுவது நல்ல பலனைத் தரும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
வீட்டில் மூத்தவர்களின் ஆலோசனை கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.
மகரம்

பரம்பரை சொத்துக்களைப் பிரிக்கும் சூழல் உண்டாகும். அப்போது பங்காளிகளிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடித்தால், வீண் கைகலப்புகளைத் தவிர்க்கலாம்.
அலைச்சல்கள் இருநு்தாலும் அதன் மூலம் சேமிப்புகள் உயரும். எந்த பொருளைக் கையாண்டாலும் அதில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
வாதத் திறமையினால் லாபம் உண்டாகும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் கிடைக்கப் பெறுவதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.
கும்பம்

வீட்டில் உள்ளவர்கள் அனைவருடைய தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
அதை செய்தும் முடிப்பீர்கள். இதனால் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். எந்த காரியமாக இருந்தாலும் அதில் நிதானமாக செயல்படுங்கள்.
தொழில் முன்னேற்றத்துக்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.
மீனம்

வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்.
எதிர்பாராத பொருள் சேர்க்கைகள் உண்டாகும். கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
உங்களுடைய கூர்மையான பேச்சுக்களால் எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் இருக்கிறது.