மாலையும் கழுத்துமாக நின்ற கணவன்... கோவிலுக்கு வந்த இடத்தில் மனைவி கண்ட காட்சி

தமிழகத்தில் முதல் மனைவியை ஏமாற்றி, கணவன் இரண்டாவது திருமணம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்.

48 வயதாகும் இவர் இராணுவ வீரர் என்று கூறப்படுகிறது. இவருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சொந்தக்கார பெண்ணான ஸ்டெல்லா என்பவருக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கணவர் சந்திர்பபோசுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஸ்டெல்லா கோபித்துக் கொண்டு அம்மாவின் வீட்டிற்கு மகன்களுடன் சென்று வாழ்ந்து வந்துள்ளார்.இதையடுத்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சுபாஷிற்கு இரண்டாம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட அவர் வரன் தேடியுள்ளார். அப்போது அவருக்கு மதுரையை சேர்ந்த பெண் ஒருவரை பிடித்துப் போக, அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி நேற்று சுவாமிமலையில் இருக்கும் முருகன் கோவிலில் சுபாஷ் அவருக்கு தாலியை கட்டி கோவிலை வலம் வந்துள்ளார்.அப்போது தான் தஞ்சாவூரில் இருக்கும் கோவில்களை சுற்ற பார்க்க ஸ்டெல்லா மகனுடன் ஊருக்கு சென்றுள்ளார்.

நேற்று சுவாமிமலையில் சாமி தரிசனம் செய்தவர், திடீரென மாலையும் கழுத்துமாக சுபாஷ் நின்ற தரிசனத்தையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின் இது குறித்து அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பொலிசார் சுபாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Previous Post Next Post