பட்டப்பகலில் காதலியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்

கர்நாடக மாநிலம் மங்களூரில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன், தானும் கழுத்தை அறுத்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தீக்ஷா என்கிற 22 வயது இளம்பெண் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சுஷாந்த் (22) என்கிற இளைஞன் திடீரென தான் மறைத்துவைத்திருந்த கத்தியை கொண்டு அந்த பெண்ணின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளான்.இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். உடனே சுஷாந்த் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளான். ஆனால் பொதுமக்கள் அதிகமாக கூடியதால், தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.இதனை பார்க்க பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், தீக்ஷாவின் நடன ஆசிரியரான சுஷாந்த் தொடர் காதல் தொல்லை கொடுத்ததும், அவர் மீது ஏற்கனவே பொலிஸில் புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
Previous Post Next Post