உலகக்கோப்பை தொடரில் முதலிடத்தில் உள்ள அணி எது? முழு புள்ளிகள் பட்டியல் இதோ

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையிலான புள்ளிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.



இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

அங்கு தற்போது மழை பெய்து வருவதால் போட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. நேற்று நடைபெறவிருந்த இலங்கை - வங்கதேச போட்டி கூட மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையிலான புள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி 6 புள்ளிகளுடன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

3 போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து அணி 2-ல் வெற்றி பெற்றுள்ள நிலையில் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்தியா இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ள நிலையில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா நான்காம் இடத்திலும், இலங்கை ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முழு புள்ளிகள் பட்டியல் இதோ,



Previous Post Next Post