மனவளர்ச்சி குன்றிய சிறுவரின் பரிதாபநிலை... அடித்து துன்புறுத்தும் உரிமையாளர்!



இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள மனவளர்ச்சி குன்றியோர் தனியார் காப்பகத்தில் இருப்பவர்களை, அதன் உரிமையாளர் ஈவு இரக்கமின்றி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களை அடித்து சித்திரவதை செய்யும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. நாகர்கோவிலை அடுத்த என்.ஜி.ஓ. காலனியில் அன்பின் சிகரம் என்ற பெயரில் இயங்கி வரும் மனநலம் குன்றியோர் காப்பகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களை சேர்ந்த, ஆதரவற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் தங்கியுள்ளனர்.

அந்தக் காப்பகத்தின் உரிமையாளராக கிருஷ்ணமணி என்பவர் உள்ளார். இந்த நிலையில் அவர், மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களை பிரம்பால் தாக்கி, காலால் உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

அங்குள்ள காப்பக நிர்வாகிகள் தங்களை கட்டி வைத்து அடிப்பதாக, ஏதும் அறியாத நிலையில் உள்ள சிறுவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிருஷ்ணமணி மீது சுசீந்திரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Previous Post Next Post