பட்டப்பகலில் பொலிஸ் நிலையம் முன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளைஞர்

மதுரையில் ஜாமீன் கையெழுத்து போட வந்த இளைஞர் பொலிஸ் நிலையம் முன்பே ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த அஜீத் (23), ரஞ்சித் (25) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, காதல் விவகாரம் தொடர்பாக தினேஷ் என்பவரின் கைகளை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதனால் கைது செய்யப்பட்ட இருவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதன்படி பொலிஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்துள்ளனர்.



இந்த நிலையில், இன்று பகல் 11 மணி அளவில் இருவரும் கையெழுத்து இடுவதற்காக பொலிஸ் நிலையம் வந்துள்ளனர்.

அப்போது 200 மீ தொலைவில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பல் அவர்களை நோக்கி வேகமாக வந்துள்ளது. இதனை பார்த்ததும் அஜித் மற்றும் ரஞ்சித் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர்.

அங்கிருந்து ரஞ்சித் தப்பிய நிலையில், ரவுடிகளிடம் சிக்கிக்கொண்ட அஜித்தை சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post