கழற்றிவிட்ட காதலியின் திருமணத்தில் உண்ணாவிரதமிருந்த முன்னாள் காதலன்: முடிவு சுபம்!

எட்டு வருட காதலி, திடீரென வேறொருவரை திருமணம் செய்ய முயன்றதை அறிந்த காதலன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். எட்டு வருட காதலி தன்னை கழற்றி விடுகிறார், அவர் என்னையே திருமணம் செய்ய வேண்டுமென இளைஞன் நடத்திய உண்ணாவிரதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஆனந்த பர்மன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த லிப்பிக்கா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில் திடீரென லிப்பிக்கா, பர்மனுடன் பேசுவதைத் தவிர்த்துள்ளார். காரணம் தெரியாமல் தவித்து வந்த பர்மனுக்கு, லிப்பிக்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக வந்த செய்தி கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்தது.

எப்படியாவது காதலியை அடைய வேண்டுமென முடிவெடுத்த வர்மன், லிப்பிக்காவின் திருமண நாளன்று அவரது வீட்டிற்கு சென்று அங்கேயே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.அவர் தன் கையில், ‘என் காதலைத் திரும்பக் கொடு. என் 8 வருட வாழ்க்கையைத் திரும்பக் கொடு’ போன்ற பதாதைகளை வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

மணமகன் வீட்டாருக்கு இதை கண்டதும் அதிர்ச்சியாகி விட்டது. நேரம் செல்ல செல்ல அங்கு இருந்த ஊர் பொதுமக்கள் பர்மனுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர். இதனால் லிப்பிக்காவும், அவரது குடும்பத்தினரும் திருமணத்தை நிறுத்தினர்.மேலும் ஆனந்த பர்மனை தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க லிப்பிக்காவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களின் ஆசியுடன் இவர்களது திருமணம் நடைபெற்றது.
Previous Post Next Post