காதலியுடன் விபரீத பாலியல் விளையாட்டில் ஈடுபட்ட காதலன்... அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் இளம் காதல் ஜோடி முன்னெடுத்த ஆபத்தான பாலியல் விளையாட்டால் காதலனின் துப்பாக்கி குண்டுக்கு காதலி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வால்ரிகோ பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.இதில் 24 வயதான பாலோமா வில்லியம்ஸ் மார்பில் குண்டடிப்பட்டு சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார்.

கடந்த இரண்டு வார காலமாகவே பலோமா, 23 வயதான ஆண்ட்ரூ ஷினோல்ட் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் துப்பாக்கியுடன் ஆபத்தான காதல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னல் பலமுறை இவர்கள் இருவரும் துப்பாக்கியுடன் இதுபோன்று நடந்துகொண்டுள்ளனர்.ஆனால், சம்பவத்தன்று பலோமாவின் மார்பில் வைத்து துப்பாக்கியை ஷினோல்ட் அழுத்தியதில், அது தவறுதலாக வெடித்துள்ளது என கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சியடைந்த ஷினோல்ட், தமது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக மூவரும் மார்பில் குண்டடிப்பட்ட பலோமாவை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி பலோமா இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் நடைபெறும் 2 மணி நேரம் முன்னர் ஷினோல்ட் போதைமருந்து பயன்படுத்தியதாகவும், பலோமாவும் போதைமருந்து எடுத்துக்கொண்டதாகவும் தெரியவந்தது.மேலும், பலோமாவை தாம் திட்டமிட்டு கொலை செய்யவில்லை எனவும், ஒரு சிலிர்ப்புக்காகவே துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும்,

அதன் ஆபத்து தங்கள் இருவருக்கும் தெரியும் எனவும் ஷினோல்ட் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இதுபோன்று எல்லை மீறிய பாலியல் விளையாட்டால் பிரித்தானிய இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post