இரண்டாவது மனைவி செய்த துரோகத்தை கண்டுபிடித்த கோடீஸ்வர கணவன்... அடுத்து நடந்த சம்பவம்

இந்தியாவில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி உடலை வாய்க்காலில் போட்ட நிலையில் எலும்புக்கூடாக சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் முன்னா லால். கோடீஸ்வர தொழிலதிபரான இவர் கடந்த மே மாதம் 5ஆம் திகதி காணாமல் போனார்.இது தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னா வசித்த பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் கோணி மூட்டையில் இருந்து துற்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி மக்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் அந்த மூட்டையை பிரித்த போது உள்ளே அழுகிய நிலையில் சடலம் இருந்தது, அதன் பாதி பகுதி எலும்புக்கூடாக இருந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் விசாரிக்கப்பட்டது.

அப்போது முன்னாவின் மனைவி லக்கி (28)யிடம் இது உங்கள் கணவரின் சடலமா எனறும் அதில் இருந்த உடையை பார்த்து சொல்லுங்கள் என்றும் பொலிசார் கூறினர்.

ஆனால் அது தனது கணவர் முன்னாவின் சடலம் இல்லை என லக்கி கூறினார். ஆனால் தனது மகன் சடலம் தான் என முன்னாவின் தாய் கூறினார்.

இதோடு தனது மகன் முன்னாவுக்கும், மருமகள் லக்கிக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் என்று அவர் பொலிசாரிடம் கூறினார்.அப்போது பொலிசாரின் சந்தேக பார்வை லக்கியின் மீது விழுந்த நிலையில் அவரிடம் விசாரித்தனர்.

முதலில் உண்மையை ஒப்பு கொள்ளாத லக்கி பின்னர் முன்னாவை தனது காதலன் தருண் மற்றும் அவர் நண்பர் உதவியுடன் கொன்றதை ஒப்பு கொண்டார்.

பொலிசார் கூறுகையில், முன்னாவுக்கு லக்கி இரண்டாவது மனைவியாவார். திருமணத்துக்கு பின்னர் லக்கிக்கு தருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் மனைவியின் துரோகத்தை கண்டுபிடித்த முன்னா அவரை கண்டித்தார்.

இதோடு மனைவிக்கு பணம் கொடுப்பதையும் நிறுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த லக்கி, தருண் மற்றும் அவர் நண்பருடன் சேர்ந்து முன்னாவை கழுத்தை நெரித்து கொன்று மூட்டையில் அவர் சடலத்தை வைத்து வாய்க்காலில் போட்டுள்ளனர் என கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து லக்கி, தருண் மற்றும் அவர் நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post