பெண்கள் வேலைக்கு வரும்பொழுது குட்டைப்பாவடை அணிந்து வந்தால் அதிக சம்பளம் தரும் நிறுவனம்..!

ரஷ்யாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பெண்கள் குட்டைப்பாவடை அணிந்து வந்தால் அதிக சம்பளம் தருவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் அலுமினியம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இந்த ஜூன் மாதத்தில் "பெமினிட்டி மாரத்தான்" என்ற கேம்பெயின் நடத்தி வருகிறது. இந்த கேம்பெயினில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.இந்த கேம்பெயினில் கலந்து கொள்ளும், பெண்கள் பணிக்கு வரும் போது அவர்களது முட்டிக்கு 5 சென்டி மீட்டருக்கு கீழே இறங்காத அளவிலான ஸ்கட் அணிந்து வந்தால் அவர்களுக்கு எக்ஸ்ட்ரா சம்பளம் கொடுக்க அந்நிறுவனம் முன் வந்துள்ளது.

ஜூன் மாதம் முழுவதும், அதாவது 30 நாட்கள் நடக்கும் இந்த கேம்பெயினில் ஒவ்வொரு நாளும் இவ்வாறான ஆடைகள் அணிந்து வந்தால் அவர்களுக்கு 100 ரஷ்ய ரூபெல் ( இந்திய மதிப்பில் ரூ106) பணத்தை அந்நிறுவனம் வழங்குகிறது.

இந்த கேம்பெயின் மூலம் பெண்கள் உடைகள் அணிவதில் மன தடுமாற்றத்தை போக்குவது, உடைகளில் பெண்கள் வெட்கப்பட வேண்டியது இல்லை என்பதை உணர வைக்க இது நடத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.ஆனால் இதற்கு பல இடங்களில் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளது. பெண்களை குறைவான ஆடை அணியவைத்து அதற்கு அந்நிறுவனம் பணம் வழங்குவது மிக கீழ் தரமான செயல் என பலர் அந்நிறுவனத்தின் இந்நடவடிக்கையை வன்மையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
Previous Post Next Post