அண்ணனுடன் ஓட்டம் பிடித்த திருமணமான பெண்! அதிர்ச்சியில் கணவன்

தமிழகத்தில் அண்ணன் முறை வாலிபருடன் திருமணமான பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாரதா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், காதல் திருமணம் செய்ததால் ரமேசுடன் அவரது தங்கை பேசாமல் இருந்துள்ளார்.



சமீபத்தில் அண்ணனை சந்தித்த சகோதரி, தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார், இதை ஏற்று அவர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற போது தங்கையின் கணவருடன் சாரதா பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

உறவு முறையில் அவர்கள் அண்ணன்- தங்கை என்பதால் இதனை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

நாட்கள் செல்ல செல்ல இருவருக்குமான பழக்கம் கள்ளக்காதலாக மாறியது, இதை தெரிந்து கொண்டு ரமேஷின் சகோதரி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

தன் தங்கையின் இந்த நிலைக்கு காரணமான சாரதாவை ரமேஷ் கண்டிக்க, கள்ளக்காதலனுடன் சேர்ந்து சாரதா ஓட்டம் பிடித்துள்ளார்.

இதைதொடர்ந்து பொலிசில் புகார் அளிக்கப்பட, சாரதாவோ ரமேசுடன் வாழ பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.

பொலிசார் எவ்வளவோ அறிவுரை கூறியும் அதை ஏற்க மறுத்ததால், எழுதி வாங்கி கொண்டு அங்கிருந்து அனுப்பி விட்டனர்.
Previous Post Next Post