தமிழகத்தில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு அவரை துஷ்பிரயோகம் செய்த ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை புலியகுளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா ( 24). இவர் மீது அடிதடி, கொலை, கொலை முயற்சி என ஏராளமான வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த யூன் 8ஆம் திகதி 16 வயது சிறுமி ஒருவரை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற ஜோஸ்வா அவரை ஒரு வீட்டில் அடைத்து வைத்தார்.
பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக மணந்து அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனிடையில் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில் பொலிசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஜோஸ்வா சிறுமியை அடைத்து வைத்திருக்கும் விடயம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு சென்றனர்.

ஆனால் அதற்குள் ஜோஸ்வா தப்பியோடியுள்ளார், இதையடுத்து சிறுமியை பொலிசார் மீட்டனர்.
பின்னர் ஜோஸ்வாவை பொலிசார் தேடி வந்த நிலையில் நேற்று பாலம் அருகில் அவரை பார்த்துள்ளனர். இதையடுத்து தப்பியோட முயன்ற ஜோஸ்வா கீழே தவறி விழுந்ததில் அவரின் கால் முறிந்தது.
இதன் பின்னர் பொலிசார் அவரை பிடித்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜோஸ்வா, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து அரசு மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்டில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜோஸ்வாவை பொலிசார் கைது செய்து உள்ளனர். இதனிடையில் ஜோஸ்வா, ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.