திருமணம் முடிந்த 5 மாதத்தில் புதுமணப்பெண் தூக்குபோட்டு தற்கொலை

ஐதராபாத் மாநிலத்தில் திருமணம் முடிந்த 5 மாதத்தில் புதுமணப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த நரசிம்மா மற்றும் அஞ்சம்மா ஆகியோரின் மகள் ஸ்ராவணி (20). இவர் கடந்த 5 மாதத்திற்கு முன்னதாக ஆர்.எல்.நகரில் வசிக்கும் ராமஞ்சநேயுலுவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்தின் போது ஸ்ராவணியின் பெற்றோர் ரூ.5 இலட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

ஆனால் திருமணம் முடிந்து இன்னும் வரதட்சணை வேண்டும் என ராமஞ்சநேயுலு மற்றும் அவருடைய பெற்றோர் ஸ்ராவணியை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ராவணி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு அவருடைய பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.இருந்தபோதிலும் அதிக மனஉளைச்சலில் இருந்த ஸ்ராவணி, வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து குளியலறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமஞ்சநேயுலு குடும்பத்தினர், ஸ்ராவணியை வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஸ்ராவணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், ராமஞ்சநேயுலு மற்றும் அவருடைய பெற்றோரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
Previous Post Next Post