600 பெண்கள்! அவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்தேன்... அதிரவைத்த சென்னை இளைஞரின் வாக்குமூலம்

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களின் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளிமெண்ட் ராஜ் செழியன் (33) என்கிற பிரதீப் தான் இந்த திடுக்கிடும் செயலை செய்து வந்துள்ளார்.ஹைதராபாத்தை சேர்ந்த இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் சென்னையில் இருந்த செழியனை கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வாக்குமூலமாக அளித்துள்ளார். செழியன் பிரபலமான ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
அவருக்கு எப்போதும் இரவு பணி என்ற நிலையில் காலையில் வீட்டில் தனிமையை உணர்ந்துள்ளார், ஏனெனில் அவர் மனைவி காலையில் பணிக்கு சென்றுவிடுவார்.

இதனால் விரக்தியடைந்த இவர் e-classified portal ஒன்றின் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களின் செல்போன் எண்களை சேகரிக்க தொடங்கினார்.

அவர்களுக்கு போன் செய்யும் செழியன், தான் மனிதவள துறையில் மேலாளராக இருப்பதாக கூறுவார்.பின்னர் நட்சத்திர ஹொட்டல்களில் நல்ல சம்பளத்தில் வேலை இருப்பதாகவும் அதற்கு அழகான மற்றும் கவர்ச்சியான பெண்கள் தேவை என சொல்வார்.

இதையடுத்து போனில் பேசும் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை தனக்கு அனுப்ப கோருவார். இதன்பின்னர் வீடியோ காலில் நிர்வாண நிலையில் பெண்ணை நிற்க சொல்வார், ஏனென்றால் இந்த பணிக்கு அழகான உடல்வாகு வேண்டும் என கூறுவார்.

பெண்கள் நிர்வாண நிலையில் இருக்கும் போது அதை குறிப்பிட்ட செயலி மூலம் பதிவு செய்து கொள்வார்.

இதன்பின்னர் அந்த நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
இப்படி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட 16 மாநிலத்தை சேர்ந்த 600 பெண்களை ஏமாற்றிவந்துள்ளார் செழியன்.இதையடுத்து செழியன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடங்கிய செல்போன்கள், லேப்டாப்களை பொலிசார் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

செழியனிடம் நடத்தப்படவுள்ள கூடுதல் விசாரணையில் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post