மன்ஹாட்டன் மாளிகையில் ஒரு இளம் பெண்ணின் மார்பகத்தைத் தொட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் இளவரசர் ஆண்ட்ரூ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பணக்கார நிதியாளரான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மாளிகையில் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
66 வயதான எப்ஸ்டீன் 2008 இல் சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்ததை ஒப்புக் கொண்டு 18 மாதங்கள் சிறையில் கழித்தவர். இவர் தற்போது மேலும் சில வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.
பிரித்தானியாவின் உயர்சமூகத்தை சேர்ந்த கிஸ்லைன் மேக்ஸ்வெல், எப்ஸ்டீனுக்கும் அவரது ‘பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நண்பர்கள்’ வட்டத்துக்கும் சிறுமிகளை பாலியல் காரணங்களுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

கிஸ்லைன் மேக்ஸ்வெல் சம்பந்தப்பட்ட அவதூறு வழக்கில் ஒரு அமெரிக்க நீதிபதியால் வெளியிடப்படாத சட்ட ஆவணங்களில் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் குற்றசாட்டு எழுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சட்ட ஆவணங்களில், 2001 ஆம் ஆண்டில் பில்லியனரின் மன்ஹாட்டன் குடியிருப்பில் ஒரு படுக்கையில் அமர்ந்திருந்தபோது ஆண்ட்ரூ தனது மார்பகத்தைத் தொட்டதாக எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜோஹன்னா ஸ்ஜோபெர்க் என்கிற பெண் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேபோல இளவரசர் ஆண்ட்ரூவுடன் பாலியல் மோதலுக்கு தள்ளப்பட்டதாகக் கூறி, மேக்ஸ்வெல் மீது வர்ஜீனியா கியுஃப்ரே என்கிற பெண் 2015 இல் வழக்குத் தொடர்ந்தார். வேலை வாங்கி தருவதாக வாக்கு கொடுத்து ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மாளிகைக்கு மேக்ஸ்வெல் அழைத்து சென்று பாலியல் மோதலில் ஈடுபட வைத்ததாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் திட்டவட்டமாக அவற்றை பொய் என்றும் குறிப்பிட்டுள்ளது.