கணவருக்கு விஷம்! காதலனிடம் ஆசை வார்த்தை கூறிய கேரள மனைவி.. அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில் புதிய திருப்பம்

அவுஸ்திரேலியாவில் இந்தியரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனையை குறைத்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

கேரள மாநிலம் புனலூரை சேர்ந்தவர் சேம் ஆபிரகாம் (34). இவரது மனைவி சோபி (32). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

சேம் தனது மனைவி, மகனுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்தார்.

அவர் அங்குள்ள ஒரு கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வந்த நிலையில் சோபி அங்குள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

கடந்த 2015 அக்டோபர் மாதம் 23ம் திகதி சேம் தனது வீட்டில் வைத்து திடீரென்று மரணமடைந்தார். அவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அவரது மனைவி சோபி தெரிவித்தார்.இந்த தகவல் ஊரில் உள்ள உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. சேம் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு அடக்கமும் செய்யப்பட்டது.

அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் தனது கள்ளக்காதலன் அருணுடன் சேர்ந்து கணவரை சோபி சயனைட் விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.

சோபி கேரளாவில் நர்சிங் படித்தபோது கோழிக்கோடை சேர்ந்த அருண் (34) என்ற என்ஜினீயருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. படிப்பு முடிந்த பிறகு அருணும் மெல்போர்னில் பணியாற்றியதால் அவர்களின் பழக்கம் தொடர்ந்து உள்ளது.

மனைவியின் கள்ளக்காதல் பற்றி தெரிய வந்ததும் சேம் கண்டித்துள்ளார். இதனால் அருணிடம் ஆசை வார்த்தை கூறிய சோபி அவருடன் சேர்ந்து கணவரை தீர்த்துகட்ட முடிவு செய்தார்.

அதன்படி இருவரும் சேர்ந்து உணவில் சயனைடு கலந்து கொடுத்து சேம் தீர்த்து கட்டி உள்ளனர்.

இதை தொடர்ந்து சோபி மற்றும் அருணை பொலிசார் கைது செய்தனர்

அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சோபிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், அருணுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது தண்டனையை குறைக்க அருண் தொடர்ந்து கோரி வந்தார்.

இதையடுத்து தற்போது அவரின் சிறை தண்டனை 24 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இதோடு அவர் பரோல் கோரும் உரிமையானது 23 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Previous Post Next Post