மரத்தில் சடலமாக தொங்கிய இளம்காதல் ஜோடி: அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்!

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணமாக இளம்காதல் ஜோடி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் பராபங்கி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் திருமணமாக இளம்காதல் ஜோடி வெள்ளிக்கிழமையன்று தூக்கில் தொங்கியுள்ளனர்.




இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், ஓம் சந்திர யாதவ் என்பவரின் மகன் சிவம் மற்றும் அதேபகுதியை சேர்ந்த சோனி வர்மா என்கிற இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.




ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மனமுடைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post