திருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்

இந்தியாவில் புதுப்பெண் ஒருவர் செல்பி மோகத்தால் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரூபாலி. இவருக்கும் ராகுல் என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.




இந்நிலையில் ரக்‌ஷாபந்தன் பண்டிகையையொட்டி தனது சகோதரர் வீட்டுக்கு ரூபாலி இரு தினங்களுக்கு முன்னர் சென்றார்.

பின்னர் அங்கிருந்து கணவருடன் தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.


அப்போது அங்குள்ள ஒரு ஆற்றின் பாலத்தின் மீது ரூபாலி உட்கார்ந்த நிலையில் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார்.

அப்போது அங்கு பலத்த காற்று வீசி கொண்டிருந்ததால் நிலை தடுமாறிய ரூபாலி அப்படியே ஆற்றுக்குள் விழுந்தார்.




அவர் தண்ணீரில் மூழ்குவதை பார்த்து செய்வதறியாமல் திகைத்த கணவர் ராகுல் கதறி அழுதார்.

பின்னர் பரிதாபமாக ரூபாலி உயிரிழந்தார், சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Previous Post Next Post