அதிகாலையில் விதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மகனிடம் நடந்ததை சொல்ல முடியாமல் தவிப்பு

புதுச்சேரியில் அதிகாலையில் தனியாக இருந்த விதவை பெண்ணை ஒரு கும்பல் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலை சேர்ந்த 48 வயதான விதவை பெண் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்ட அந்தப் பெண்மணி, மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி அருகேயுள்ள பரவை காய்கறி சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிவர பேருந்துக்காகக் காத்திருந்திருக்கிறார்.அப்போது திடீரென காரில் வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க நான்கு இளைஞர்கள், விதவை பெண்ணின் வாயைப் பொத்தி காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் அங்குள்ள இருட்டு பகுதியில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தத்தோடு அவரிடம் இருந்த 6,000 ரூபாய், செல்போன் மற்றும் அணிந்திருந்த நகைகளையும் அந்தக் கும்பல் பறித்துச் சென்றுவிட்டது.

நடந்த கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாமல், மகனிடம் நகை மற்றும் பணத்தை பறிகொடுத்துவிட்டதாகக் அப்பெண் கதறியிருக்கிறார்.

பின்னர் இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. பொலிசாரிடம் தனக்கு நடந்தவற்றை விளக்கி உள்ளார் அந்த பெண்

பொலிசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தோம். சிசிடிவி் காட்சிகள் மூலம் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தைக் கண்டறிந்தோம்.

இதையடுத்து சின்னையா, விஜய் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளோம். மேலும், ராமு மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.

Previous Post Next Post