வெளிநாட்டில் இருந்து திரும்பிய மனைவிக்கு கணவன் செய்த துரோகம்! விசாரணையில் தெரிந்த உண்மை

தமிழகத்தில் மனைவி வெளிநாட்டிற்கு படிக்க சென்ற நிலையில், கணவன் தனக்கு விவகாரத்தாகிவிட்டதாக கூறி இரண்டாவது திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டி.நகர் பத்மநாபன் தெருவை சேர்ந்தவர் சரண்குமார் ராஜி (35). இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த பிரசாந்தி (32) என்பவருக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.




திருமணத்திற்கு பின் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.



இதில் பிரசாந்தி, மகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் 2016-ஆம் ஆண்டு பிரசாந்தி வெளிநாட்டிற்கு படிக்க சென்றதால், அப்போது மகளை கணவரிடம் விட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து திரும்பிய அவர், மகளைப் பார்த்தபதற்காக கணவரின் வீட்டிற்கு சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.




ஏனெனில் அந்த வீட்டில் ராதா என்கிற பெண் இருந்துள்ளார். இதனால் இது யார் என்று பிரசாந்தி விசாரித்த போது கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதனால் உடனடியாக பிரசாந்தி இது குறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்போது பொலிசார் சரண்குமார் ராஜியை பிடித்து விசாரித்த போது, முதல் மனைவியுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு விவாகரத்து ஆனதாக போலியாக ஒரு ஆவணத்தை தயாரித்து, அதன் மூலம் ராதாவை இரண்டாவது திருமணம் செய்தது தெரியவந்ததால், முதல் மனைவிக்கு தெரியாமல் போலி ஆவணம் மூலம் இரண்டாவது திருமணம் செய்த சரண்குமார் ராஜியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post