கல்லூரிக்கு சென்ற மாணவி விடுதி அறையில் தூக்கில் தொங்கிய சோகம்..! அதிர்ந்துபோன தோழிகள்

ஆந்திர மாநிலத்தில் அனந்தபுரி பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜூ. இவரது மகள் காவியா(20).

இவர், ஆந்திராவில் உள்ள தனியார் க்ல்லூரியில் பி.எஸ்.சி.நர்சிங் படித்து வருகிறார். பள்ளிக்கூடங்களில் தெலுங்கு மொழியிலேயே பாடங்களை படித்ததால் கல்லூரியில் ஆங்கில மொழியில் பாடங்களை படிக்க முடியாமல் பின் தங்கியே இருந்தார்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான காவியா, வயிற்றுவலி என்று கூறிவிட்டு கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கி இருந்தார்.அப்போது, யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய துப்பட்டாவை கொண்டு மின்விசிறியில் போட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், கல்லூரி முடிந்து விடுதிக்கு திரும்பிய சக மாணவிகள் காவியா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் அப்படியே திகைத்து நின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விடுதி நிர்வாகம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காவியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Previous Post Next Post