ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சடலமாக கிடந்த மொடல் அழகி

பெங்களூரில் மொடல் அழகி கொலை செய்யப்பட்ட வழக்கில் கால் டாக்சி ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



மொடல் அழகியாகவும், மேலாளராகவும் பதவி வகித்து வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பூஜா சிங் தே என்பவர் கடந்த ஜூலை 30 ம் தேதி பெங்களூருக்கு வந்து, பின்னர் ஜூலை 31 அன்று மீண்டும் சொந்த ஊருக்கு கால் டாக்சியில் திரும்பியுள்ளார்.




அவரை காரில் ஏற்றி சென்ற எச் எம் நாகேஷ் (22) என்கிற இளைஞர், அதிகாலை 4.15 மணியளவில் ஓசூர் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி பணம் பறிக்க முயன்றுள்ளார்.



அதற்கு பூஜா மறுத்ததால், இரும்புக்கம்பியால் ஓங்கி தலையில் அடித்துள்ளார். இதில் பூஜா மயங்கியதும், அவருடைய பர்சில் இருந்த ரூ. 500 பணத்தையும், இரண்டு செல்போன்களையும் எடுத்துக்கொண்டு காரை மீண்டும் ஒட்டி சென்றுள்ளார்.

சிறிது தூரம் கார் சென்றதும், பூஜாவிற்கு சுயநினைவு திரும்பியுள்ளது. பூஜா தப்பி ஓடுவதற்கான கதவைத் திறந்தபோது, கத்தியால் சரமாரியாக அவரை குத்திக்கொலை செய்துவிட்டு, முகத்தை கல்லால் அடித்து சிதைத்துள்ளார்.







மறுநாள் காலையில் அப்பகுதியில் சடலம் கிடப்பதை பார்த்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.




அந்த பெண் அணிந்திருந்த ‘டைட்டன்’ கடிகாரத்தின் தனிப்பட்ட அடையாள எண்ணை வைத்து வடமாநிலத்தவர் என்பதை பொலிஸார் அடையாளம் கண்டனர். இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், நாகேஷை கைது செய்து விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.




பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Previous Post Next Post