கருவை கலைத்த காதலன்.. தூக்கில் தொங்கிய மாணவி... உருக்கமான கடிதம் சிக்கியது

தமிழகத்தில் கர்ப்பமாக்கிய காதலன் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை சேர்ந்தவர் நந்தினி. கல்லூரி மாணவியான இவர் கடந்த 17ஆம் திகதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.




இது குறித்து நந்தினியின் தந்தை லட்சுமிகாந்தன் பொலிசில் புகார் அளித்தார். அதில், எனது உறவினரான பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு கடந்த 16-ம் திகதி நந்தினி சென்றுள்ளார்.

அப்போது பன்னீர்செல்வத்திடம் நந்தினி பேசுகையில், தினேஷ் என்பவரை மூன்றாண்டுகளாக காதலித்து வருகிறேன்.



அவர் தன்னை பொண்டாட்டி, பொண்டாட்டி என்றுதான் கூப்பிடுவார்

அந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் நான் கர்ப்பமானேன். இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கூறி கருவைக் கலைக்க மாத்திரைகளை கொடுத்தார். அதைச் சாப்பிட்டதும் கர்ப்பம் கலைந்துவிட்டது. அதன்பிறகு என்னிடம் தினேஷ் சரியாகப் பேசுவதில்லை.

திடீரென ஒருநாள் எனக்கு போன் செய்த தினேஷ், என்னுடைய அத்தை மகளைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்றார்.

அதைக் கேட்டு மனவேதனையடைந்தாக பன்னீர்செல்வத்திடம் நந்தினி கூறியதாக லட்சுமிகாந்தன் கூறினார்.




இதையடுத்தே நந்தினி தற்கொலை செய்ததாகவும், இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் லட்சுமிகாந்தன் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் நந்தினி தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதத்தில், அம்மா என்னை மன்னித்துவிடு, இந்தக் குடும்பத்தில் பெண் பிள்ளை பிறந்தால் என்னைப்போல வளர்க்க வேண்டாம்.

நான் அவனை உண்மையாக காதலித்தது தான் தவறு. அவனை மட்டும் சும்மா விடாதீங்க. உயிரோடு அவன் நரக வேதனை அனுபவிக்கணும். அவன் அம்மாவையும் சும்மா விடாதீங்க என்று எழுதியுள்ளார்.



பொலிசார் கூறுகையில், இந்த வழக்கில் எதிரிகளாக தினேஷ், மற்றும் அவர் தாய் சரஸ்வதியை சேர்த்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது என கூறியுள்ளனர்.

Previous Post Next Post