மாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

தமிழகத்தில் குடும்ப தகராறில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை, மாமானார் துரத்தி சென்று கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். பெயிண்டரான இவரும் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி- மீனா தம்பதியின் மகள் ஷாலினியும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து ஷாலினி நிறைமாத கர்ப்பிணியானார். கர்ப்பிணி மனைவியை சரியாக கவனிக்காமலும், சரியாக வேலைக்கு செல்லாமலும் ராஜேந்திரன் இருந்துள்ளார்.

இதற்கிடையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷாலினிக்கு பிரசவ வலி வராததால், மருத்துவர்கள் திருப்பி அனுப்பியுள்ளார்.

இதனால், ஷாலினி தமது சகோதரி வீட்டுக்கு, தாயருடன் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று, அங்கு சென்ற ராஜேந்திரன், மனைவியை தம்முடன் அனுப்பி வைக்குமாறு மாமியாரிடம் கேட்டுள்ளார்.

ஆனால், ஷாலினியை விட மறுத்த அவர், சரியாக வேலைக்கு செல்லாதவனுடன் தன் மகளை அனுப்ப மாட்டேன் என்று கூற, ஆத்திரத்தில் ராஜேந்திரன்,மாமியாரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இந்த தகவல் மாமனார் தங்கமணிக்கு தெரியவர, மருமகனை துரத்தி சென்று, தான் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வயிற்றில் குத்தியுள்ளார்.

இதனால் ராஜேந்திரன் அந்த இடத்திலே சரிந்து விழுந்தார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவித்துவிட்டு, அதன் பின் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியதையடுத்து, இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து

சிசிடிவி காட்சிகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மருமகனை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மாமனார் தங்கமணியை தேடி வருகின்றனர். மாமியார் மீனாவும் தலைமறைவாகியுள்ளார்.இந்த நிலையில் மீண்டும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஷாலினிக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post