நடுரோட்டில் மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்.. நேரில் பார்த்த கணவர் செய்த தரமான சம்பவம்..!

தெலுங்கானாவில் நடுரோட்டில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்கள் செய்த இளைஞரை பெண்ணின் கணவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் இளம்தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணிற்கு திருமணம் ஆனது தெரிந்தும் பாலியல் சீண்டல்கள் செய்ததாக கூறப்படுகிறது.

குறித்த பெண், பலமுறை தடுத்து பார்த்தும் குறித்த இளைஞர் விடாமல் தொல்லை செய்து வந்துள்ளார்.

இதனால், செய்வதறியாது, குறித்த பெண் தனது கணவரிடம் நிகழ்ந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த கணவன் திட்டம் தீட்டி, ஒரு நாள் மறைந்து நின்று அந்த இளைஞன் தன் மனைவியை சீண்டுவதை பார்த்துள்ளார்.

பின்பு, அந்த இளைஞனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, அந்த இளைஞனை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார். ஷுவை மனைவியிடம் கொடுத்து அந்த இளைஞனை அடிக்குமாறு கூறியுள்ளார்.

அந்த இளைஞனை தன் மனைவி ஷுவால் அடைக்கும் காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Previous Post Next Post