கணவரின் நண்பருடன் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசிய மனைவி.. அதனால் நடந்த விபரீதம்

இந்தியாவில் தனது மனைவியிடம் தினமும் போனில் பேசி வந்த நண்பனை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் வசித்து வருபவர் முனீன். அசாமை சேர்ந்த இவர் அங்கு தங்கி வெல்டராக பணிபுரிந்து வந்தார்.
இவருடன் பீகாரை சேர்ந்த பஸ்வான் என்பவரும் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் முனீன் மனைவியின் செல்போன் நம்பரை எப்படியோ பஸ்வான் வாங்கியுள்ளார். இதையடுத்து தினமும் அவருடன் மணிக்கணக்கில் போனில் பேசியுள்ளார்.இது குறித்து அறிந்த முனீன் அதிர்ச்சியடைந்த நிலையில் ஏன் இப்படி செய்கிறாய் என பஸ்வானிடம் கேட்டார்.
இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் பஸ்வானை முனீன் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் பெங்களூரின் ஜிகானி பகுதியில் தலைமறைவாக இருந்த முனீனை கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post