போதையில் படுக்கையில் உருண்ட தாய்: அருகில் படுத்திருந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

பிரித்தானியாவில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிக மதுபானம் அருந்திய ஒரு தாய், போதையில் புரண்டு படுத்ததில், அவர் பக்கத்தில் படுத்திருந்த நான்கு மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லிவர்பூலைச் சேர்ந்த Milda Stucinskaite மற்றும் அவரது கணவரான Audrius Krupaitis ஆகிய இருவரும் சம்பவம் நடந்த அன்று நன்றாக மது அருந்தியிருக்கிறார்கள், அத்துடன் கஞ்சாவும் புகைத்ததாக தெரிகிறது.
அதிக போதையிலிருந்த Audrius நாற்காலியில் சாய்ந்து உறங்க, Mildaவும் அவரது நான்கு மாத குழந்தையான Mija Krupaityteம் சோபாவில் உறங்கியிருக்கிறார்கள்.அப்போது அதே வீட்டில் தங்கியிருந்த அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு வந்திருக்கிறார்.

அப்போது Milda தனது குழந்தையின்மீது படுத்திருப்பதைப் பார்த்து பதறிப்போய், அவரை எழுப்பியிருக்கிறார்.
அப்போதே குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்திருக்கிறது. உடனடியாக அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் உட்பட, அந்த பகுதிக்கு வந்திருந்த மருத்துவ உதவியாளர்கள் வரை அந்த குழந்தையை காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள்.

ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், Mijaவைக் காப்பாற்ற முடியவில்லை.பொலிசார் குழந்தையின் பெற்றோரான Mildaவையும் Audriusஐயும் கைது செய்து விசாரித்த நிலையில், குழந்தையின் உடலில் எந்த காயங்களும் இல்லாததால், அது தற்செயலாக நடந்த விபத்துதான் கொலை அல்ல என்பது தெரியவர, அவர்களை விடுவித்துள்ளார்கள்.
வழக்கு விசாரணையின் முடிவில், அது விபத்துதான் கொலை அல்ல என்று நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Previous Post Next Post