மனைவியை அழைத்துச் சென்று கணவன் செய்த அதிர்ச்சி செயல்... இதுக்கு தான் மாமா கூப்பிட்டு போனாரா என தம்பி கதறல்

தமிழகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் காவலராக பணிபுரிந்து வருபவர் நரேஷ். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும் 7 வயதில் வருண் என்ற மகனும் உள்ளார்.

இவர்கள் செம்பியன் காவலர் குடியிருப்பில் வசித்துவந்தனர். வருண் அங்கிருக்கும் தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று நடன வகுப்பிற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், அம்மா வெளியில் சென்றிருப்பார் என்று எண்ணி வெளியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.


அப்போது அங்கு வந்த வருணின் தாய்மாமன் சரவணனிடம், அம்மா எங்கே என்று கேட்ட போது, வீடு பூட்டிக் கிடக்கிறது மாமா என்று மட்டுமே கூறியுள்ளார்.

இதையடுத்து சரவணன் வீட்டின் கதவை பல முறை தட்டியுள்ளார், ஆனால் கதவு திறக்கப்படவில்லை, இதனால் சந்தேகமடைந்த சரவணன் வீட்டின் ஜன்னலை உடைத்து பார்த்த போது, அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் வீட்டின் உள்ளே சகோதரி ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்திலும், நரேஷ் தூக்கில் தொங்கியபடியும் கிடந்துள்ளார்.இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அங்கு விரைந்து வந்த பொலிசார், இரண்டு பேரின் சடலங்களையும், மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், மனைவியை ஜெய்ஸ்ரீயை கொலை செய்துவிட்டு, நரேஷ் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.


பொலிசார் இது குறித்து கூறுகையில், காவலரான நரேஷ், குடும்பத்துடன் செம்பியம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்துள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மகனை அழைத்துக்கொண்டு புழல், திருமால்நகரில் உள்ள தாய் வீட்டுக்குச் ஜெயஸ்ரீ சென்றுள்ளார்.

இதனால், நரேஷ் அங்கு சென்று தங்கியுள்ளார். அதன் பிறகும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், சில தினங்களுக்கு முன்பு, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயஸ்ரீ, பெரம்பூர் அகரம் பகுதியில் உள்ள சகோதரர் சரவணன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற நரேஷ், மனைவியை சமரசப்படுத்தி நேற்று காலை புழல் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
அதன்பிறகு அவர் வேலைக்குச் சென்றுவிட்டார். வேலை முடிந்து வீட்டுக்கு இரவு வந்தபோது மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நரேஷ், மனைவி ஜெயஸ்ரீயைக் காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்து, வயிற்றில் குத்தி கொலை செய்துள்ளார்.

பிறகு, மனவேதனையடைந்த அவர், மனைவியின் துப்பட்டாவால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டதாக பொலிசார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து ஜெயஸ்ரீ சகோதரர் சரவணன் கூறுகையில், சம்பவ தினத்தன்று காலையில் எங்கள் வீட்டிற்கு வந்த நரேஷ், ஜெயஸ்ரீயை அழைத்துச் செல்வதாக கூறினார்.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி, புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர். அதன் பின் விட்டிற்கு சென்ற ஜெயஸ்ரீ எப்படி இருக்கிறாள் என்பதற்காக போன் செய்தேன், அவள் போன் எடுக்கவில்லை, அதன் பின் மாமாவிற்கும் போன் செய்தேன், அவர் எடுக்கவில்லை, இதனால் சந்தேகமடைந்து வீட்டிற்கு வந்த போது, நான் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜெயஸ்ரீயை கொலை செய்யவா மாமா வீட்டு அழைத்துச் சென்றார், தாய் மற்றும் தந்தை இருவரையும் பறிகொடுத்து நிற்கும் அவர்களுடைய 7 வயது மகன் வருணிற்கு நான் என்ன சொல்வேன் என்று கதறி அழுதார்.
Previous Post Next Post