கணவர் சடலத்தை பார்த்து கதறி அழுத மனைவி.. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

தமிழகத்தில் கணவரை கொலை செய்துவிட்டு அவர் இயற்கையாக இறந்ததாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையை சேர்ந்தவர் தென்னரசு (38) இவர் விஜயலட்சுமி (25) என்ற பெண்ணை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி தென்னரசு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

குடிக்கு அடிமையான அவர் மஞ்சள் காமாலை நோய் காரணமாக உயிரிழந்தார் என விஜயலட்சுமி உறவினர்களிடம் கூறினார்.
அதே போல அவர் தென்னரசு சடலத்தை பார்த்து கதறி அழுதபடி இருந்தார்.

இதனால் அவர் மீது பலருக்கும் சந்தேகம் வரவில்லை, ஆனால் தென்னரசு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சிலர் பொலிசில் புகார் அளித்த நிலையில் தென்னரசுவின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.அதில், தென்னரசு தொண்டை எலும்பு உடைந்து கொல்லப்பட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று தெரியவந்தது.

இதனால் பொலிசாரின் சந்தேக பார்வை விஜயலட்சுமி மீது திரும்பியது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது காதலன் சரவணனுடன் சேர்ந்து கணவரை கொன்றது தெரியவந்தது.
பொலிசார் கூறுகையில், தென்னரசுவிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த சரவணக்குமாருடன், விஜயலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டது.

தென்னரசு இதைக் கண்டித்துள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கணவரை தீர்த்துக்கட்ட சரவணக்குமாருடன் சேர்ந்து திட்டமிட்டார். அதன்படி விஜயலட்சுமியும் சரவணக்குமாரும் சேர்ந்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தென்னரசுவை, கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மஞ்சள் காமாலை பாதிப்பால் இறந்ததாக நாடகமாடியுள்ளனர் என கூறியுள்ளனர்.
Previous Post Next Post